உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம்
சுருக்கம்ZSI
உருவாக்கம்1 சூலை 1916; 108 ஆண்டுகள் முன்னர் (1916-07-01)
வகைஅரசு நிறுவனம்
நோக்கம்விலங்கியல் வகைப்பாடு, பாதுகாப்பு
தலைமையகம்கொல்கத்தா
தலைமையகம்
சேவை பகுதி
இந்தியா
இயக்குநர்
முனைவர் தீர்த்தி பானர்ஜி
தாய் அமைப்பு
இந்திய சுற்றுச்சுழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்
வலைத்தளம்zsi.gov.in

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் (Zoological Survey of India), 1916ஆம் ஆண்டு ஜீலை 1ஆம் நாள் நிறுவப்பட்டது. இந்திய அரசு சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் இவ்வமைப்பு செயல்படுகிறது. இந்திய முன்னணி நிறுவனமாகச் செயல்படும் இது விலங்கியல் ஆராய்ச்சி மற்றும் விலங்குகள் கணக்கெடுப்பினை இந்தியா முழுமைக்கும் மேற்கொள்கிறது.

வரலாறு

[தொகு]
இந்தியன் காட்டெருமை (பாசு காரசு) இந்திய விலங்குகள் கணெக்கெடுப்பு நிறுவன சின்னம். ஆதாரம்:நிறுவன நூலக ஓவியம் சேகரிப்பு

இந்திய விலங்கியல் கணக்கெடுப்பானது[1] இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் முறையாகத் தொடங்கப்படுவதற்கு முன்பிருந்தே நடைமுறையிலிருந்தது. ஜனவரி 15, 1784இல் சர் வில்லியம் ஜோன்ஸ் நிறுவிய வங்காள ஆசிய சங்கம் நிறுவப்பட்டதிலிருந்து இந்திய விலங்கியல் கணெக்கெடுப்பின் வரலாறு தொடங்குகிறது. வங்காளத்தின் ஆசியச் சமூகம் இந்திய அருங்காட்சியகம் (1875), இந்திய விலங்கியல் ஆய்வு, இந்திய புவியியல் ஆய்வு உள்ளிட்ட நிறுவனங்களின் தாய் நிறுவனமாக இருந்தது. இந்திய விலங்கியல் கணக்கெடுப்பு நிறுவனம் அமைவது வங்காள ஆசியச் சங்கத்தினை நிறுவிய சர் வில்லியம் ஜோன்ஸின் கனவுத் திட்டம் என்றால், அது மிகையல்ல. வங்காள ஆசிய சமூகம் 1796 முதல் விலங்கியல் மற்றும் புவியியல் மாதிரிகளைச் சேகரிக்கத் தொடங்கி 1814ல் ஓர் அருங்காட்சியகத்தை அமைத்தது. “ஆசியச் சமூகத்தின் அருங்காட்சியகத்தின்" முதல் கண்காணிப்பாளரான நதானியேல் வாலிச், புவியியல் மற்றும் விலங்கியல் மாதிரிகள் சேகரித்தலுக்குப் பொறுப்பாளராக இருந்தார். இவரது விலங்குகளின் சேகரிப்பின் காரணமாக அருங்காட்சியகத்தின் விலங்கியல் காட்சிப் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தின் தோற்றமானது 1875ஆம் ஆண்டில் இந்திய அருங்காட்சியகம் துவக்கப்பட்டதிலிருந்து தொடங்கியது. புதிய அருங்காட்சியகம் தொடக்கத்தில் மூன்று பிரிவுகளை மட்டுமே கொண்டிருந்தது. அவை: விலங்கியல், தொல்பொருள் மற்றும் புவியியல் ஆகும். வங்காள ஆசியச் சங்கத்தின் விலங்கியல் சேகரிப்புகள் 1875இல் முறையாக இந்திய அருங்காட்சியகத்தின் அறங்காவலர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.

1875 முதல் 1916 வரையிலான காலகட்டத்தில் அருங்காட்சியகத்தின் விலங்கியல் பிரிவு படிப்படியாக விரிவடைந்து ஆசியாவின் இயற்கை வரலாற்றின் மிகப்பெரிய தொகுப்பாக வளர்ந்தது. வங்காள ஆசியச் சமுதாயத்தின் கண்காணிப்பாளர்கள், இந்திய அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளர்களாக செயல்பட்ட, ஜான் மெக்லெலாண்ட், எட்வர்ட் பிளைத், ஜான் ஆண்டர்சன், ஜேம்ஸ் வூட்-மேசன், ஆல்ஃபிரட் வில்லியம் அல்காக் மற்றும் இறுதியாக தாமஸ் நெல்சன் அன்னண்டேலா மற்றும் அவர்களது சகாக்கள் மூலம் அருங்காட்சியகத்தில் விலங்குகளின் தொகுப்புகள் அதிகரித்தது. குறிப்பாக முதுகெலும்புக் குழுக்கள் மாதிரி சேகரிப்புகள் ஏராளமாகத் தொகுக்கப்பட்டன. மதிப்புமிக்க சேகரிப்பில் நிலம் மற்றும் நீர் வாழ் விலங்குகள் பல சேர்க்கப்பட்டன. கண்காணிப்பாளர்களின் அரசியல் மற்றும் இராணுவ பயணங்களின் போது நிறைய விலங்குகள் சேகரிக்கப்பட்டன. குறிப்பாக பிரான்சிஸ் டேயின் இந்திய மீன்கள், லியோனல் டி நிக்கேவில் பட்டாம்பூச்சிகள், டட்ஜியன் மற்றும் எட்வர்ட் எர்னஸ்ட் கிரீனின் அந்துப்பூச்சிகள், ஜேக்கப் ஆர்.எச். நெர்வார்ட் வான் டிபோலின் வண்டுகள் மற்றும் கோட்வின் ஆஸ்டன் மெல்லுடலிகள் குறிப்பிடத்தக்கன.[2]

நதானியேல் வாலிச்சின் கவனிப்பின் கீழ் ஆசியச் சமுதாய அருங்காட்சியகத்தில் உள்ள விலங்கியல் கேலரி இந்திய விலங்கியல் ஆய்வை உருவாக்குவதற்கான காரணமாக அமைந்தது. பின்னர் ஜூலை 1, 1916இல் தன்னாட்சி அமைப்பாக இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம் பிறந்தது. இந்திய அரசு வெளியிட்டுள்ள 'இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனம்' கல்வித் துறை, தீர்மானம் எண். 1916ஆம் ஆண்டு ஜூன் 20ஆம் தேதியிட்ட சிம்லா அருங்காட்சியகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது: "மார்ச் 1913இல், இந்திய அருங்காட்சியகத்தின் அறங்காவலர்கள் தலைவர், விலங்கியல் பிரிவை அங்கீகரிப்பது தொடர்பாக அருங்காட்சியகத்தின் விலங்கியல் மற்றும் மானுடவியல் பிரிவின் கண்காணிப்பாளரிடமிருந்து ஒரு பிரதிநிதித்துவத்தை அனுப்பினார் இது விலங்கியல் ஆய்வு அமைப்பு தொடர்பானது. இந்திய விலங்கியல் கணக்கெடுப்பை நிறுவுவதற்கான தகுதியை ஏற்கெனவே பரிசீலித்திருந்த இந்திய அரசு, அருங்காட்சியகத்தின் அறங்காவலர்களுக்குத் தகவல் அளித்தது, இதுபோன்ற ஒரு கணக்கெடுப்புக்கான திட்டத்தைப் பரிசீலிக்கத் தயாராக உள்ளோம். தற்பொழுது செயல்படும் இந்தியாவின் தாவரவியல் ஆய்வு போன்று தேவையான விவரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி அறங்காவலர்கள் தங்கள் திட்டங்களைச் செப்டம்பர் 1913 இறுதியில் சமர்ப்பித்தனர்"

இந்திய அருங்காட்சியகத்தில் துணை கண்காணிப்பாளராகவும் (1904), பின்னர் கண்காணிப்பாளராகவும் (1907) சேர்ந்த தாமஸ் நெல்சன் அன்னண்டேலின் தீவிர முயற்சிக்குப் பிறகு, இந்திய விலங்குகள் கணக்கெடுப்பு நிறுவனத்தை நிறுவுவதில் தனது இலக்கை அடைந்தார். மேலும் அவர் இந்நிறுவன இயக்குநராக பணியேற்றவர், ஏப்ரல் 1924இல் அகால மரணமடைந்தார். முனைவர் அன்னண்டேல் பல ஆண்டுகளாக இந்திய அருங்காட்சியகத்தின் அறங்காவலர்களின் கெளரவ செயலாளராக இருந்தார். இவர் 1923ல் வங்காள ஆசியச் சங்கத்தின் தலைவராகவும் இருந்தார்.[3]

1986ல் கொல்கத்தாவில் தலைமையகம்
2015ல் கொல்கத்தாவில் இகநி, முன்புறத்தில் "ஜீவந்தரா" என்ற சிற்பம்
இந்திய அருங்காட்சியக கட்டிடம், கொல்கத்தா
தாழ்வாரத்தின் காட்சி
நிறுவனத்திலிருந்து கொல்கத்தா நகரத்தின் காட்சி

தலைமையகத்தில் பிரிவுகள் மற்றும் பகுதிகள்

[தொகு]

பிரிவுகள் மற்றும் பகுதிகள்

[தொகு]

பிராந்திய மையங்கள்

[தொகு]

தேசிய விலங்கியல் தொகுப்புகள்

[தொகு]

நூற்றாண்டுகளுக்கு முந்திய விலங்கு காட்சி சேகரிப்புகளை ஆசிய வங்காள சங்கம் மற்றும் கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தின் (1814-1875) விலங்கியல் பிரிவிலிருந்து இந்நிறுவனம் பெற்றுக்கொண்டது.

வெளியீடுகள்

[தொகு]
  • இந்திய விலங்கியல் ஆய்வின் பதிவுகள் [4]
  • இந்திய விலங்கியல் ஆய்வின் நினைவுகள் [5]
  • அவ்வப்போது ஆவணங்கள் [6]
  • பிரித்தானியாவின் இந்தியாவின் விலங்குகள் [7]
  • இந்தியாவின் விலங்குகள் [8]
  • 1961-62 முதல் ஆண்டு அறிக்கை
  • மாநில விலங்குகள் தொடர் (20 மாநிலங்கள்) [9]
  • பாதுகாப்பு பகுதி தொடர் வெளியீடுகள்[10]
  • சுற்றுச்சூழல் தொடர் வெளியீடுகள் [11]
  • ஈரநில தொடர் வெளியீடுகள்
  • கழிமுகத் தொடர் வெளியீடுகள்
  • கடல் தொடர் வெளியீடுகள்
  • இமயமலை தொடர் வெளியீடுகள்
  • விலங்கு கண்டுபிடிப்புகள் (புதிய இனங்கள் மற்றும் புதிய பதிவுகள்)
  • கையேடுகள் / சித்திர வழிகாட்டிகள் [12]
  • சிறப்பு வெளியீட்டுத் தொடர் வெளியீடுகள்[13]
  • அச்சுறுத்தப்பட்ட விலங்குகளின் நிலை ஆய்வு [14]
  • இந்திய விலங்கியல் நூலியல் (நிறுத்தப்பட்டது)
  • சூலோஜியானா (நிறுத்தப்பட்டது) தொகுதி. 1 முதல் 5 வரை [15]
  • தொழில்நுட்ப மோனோகிராஃப் (நிறுத்தப்பட்டது) தொகுதி. 1 முதல் 17 வரை [16]
  • இகநி தொகுதியின் செய்திமலர். (நிறுத்தப்பட்டது) தொகுதி 1 முதல் 8 வரை [17]

நூலகம்

[தொகு]

கொல்கத்தா மற்றும் பிராந்திய மையங்களில் உள்ள நூலகத்தில் மொத்தம் சுமார் 1,35,000 தொகுதிகள் உள்ளன. இவற்றில் புத்தகங்கள், பத்திரிகைகள், தனிவுரைநூல்கள், பயணங்களின் அறிக்கைகள் மற்றும் விலங்குகள் கணக்கெடுப்பு அறிக்கை, குறிப்பிட்ட கால இடைவெளிகள் வெளியான விலங்கியல் பற்றிய பிற தொன்மையான ஆய்வுத் தொகுப்புகள் உள்ளன.[18] கொல்கத்தா நூலகத்தில் சுமார் 400 தலைப்புகளில் அரிய புத்தகங்களைக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க ஆவணங்களில் சில கார்ல் லின்னேயஸ் மற்றும் ஃபேபீரியசின் வெளியீடுகள், புகழ்பெற்ற விஞ்ஞானிகள், உயிர் புவியியலாளர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் ஓவியங்கள் மற்றும் வரைபடங்கள் ஆகியவை அடங்கும்.[19]

படக்காட்சி

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Zoological Survey of India-History and Progress 1916-1990 (1990). Edited by Director, Zoological Survey of India. Published by ZSI, Kolkata.109pp.
  2. India, Zoological Survey of (1977). Newsletter - Zoological Survey of India (in ஆங்கிலம்). Zoological Survey of India.
  3. India, Zoological Survey of (1999). Annual Report on the Zoological Survey of India for the Year ... (in ஆங்கிலம்). Manager of Publications, Civil Lines.
  4. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  5. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  6. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  7. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  8. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  9. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  10. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  11. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  12. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  13. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  14. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  15. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  16. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  17. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  18. "Zoological Survey of India | Digital archives of their Publications". faunaofindia.nic.in.
  19. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-10-13.

வெளி இணைப்புகள்

[தொகு]